newuthayan.com
16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்! - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்
நாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் வட மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் இயங்கும் என்று ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (14) தெரிவித்துள்ளார்.