maattru.com
தங்கல் - பார்ப்பவர்கள் மனதில் செய்யும் மனயுத்தம் ! - மாற்று
இந்தி திரையுலகில் (பாலிவுட் என்ற சொல்லை அறிந்தே தவிர்க்கிறோம்) தலையில் அடித்துக்கொள்ளும்படியான படங்களுக்கு குறைவில்லை ஆனாலும் அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் , நல்ல கலைஞர்களின் படைப்புகள் என வந்து சற்றே ஆறுதல்படுத்தும். அவ்வாறான ஒரு நல்ல திரைப்படம்தான் தங்கல் . தங்கல் என்றால் யுத்தம் எனப்பொருள். சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிங்க் திரைப்படம் எப்படி பெண் குறித்த பல கற்பிதங்களை நேருக்கு நேர் நின்று கேள்வி எழுப்பி, கட்டுடைத்ததோ, அதே வரிசையில் சேர்ந்திருக்கிறது தங்கல். …