mygreatmaster.com
மக்களுக்காக வாழ்ந்த இயேசு
கழுகுப்பார்வைகள், இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்க கூர்ந்து பார்க்க ஆரம்பித்து விட்டன. எப்படியும் இயேசுவை தொலைத்துவிட வேண்டும் என்று, தலைமைச்சங்கத்தால் அனுப்பப்பட்ட குழு, இயேசுவை பின்தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இயேசுவின் ஒவ்வொரு அசைவும் தீவிரமாகக் கவனிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், இயேசுவின் முன்னால், ஓய்வுநாளில் கைசூம்பிப்போன மனிதன், குணம் பெறுவதற்காக காத்திருக்கிறான். அந்த மனிதனுக்கும் தெரியும், ஓய்வுநாளில் சுகம்பெறுவது, தனக்கு சுகம் கொடுக்கிறவருக்கு தேவையில்லாத பிரச்சனைகளைத் தரும் என்று. ஆனால், அந்த மனிதன் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. குணம் பெறுவது ஒன்றையே…