mygreatmaster.com
பெறுவதைவிட தருவதே மேலானது !
சில உண்மைகளை அனுபவத்தின் மூலம் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அவற்றுள் ஒன்றுதான் கொடுப்பதன் மேன்மை. கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும் என்ற ஆண்டவரின் அருள்வாக்கின் அருமையை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் கொடுத்தலின் மேன்மை போற்றப்படுகிறது. முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவுக்கு அப்பம் கொடுத்துப் பசி நீக்கிய கைம்பெண்ணுக்கு ஆண்டவர் அற்புதமான முறையில் தொடர்ந்து உணவு கிடைக்கச் செய்த நிகழ்வை வாசிக்கிறோம். நற்செய்தி வாசகத்திலோ ஆண்டவர் இயேசு மறைநுhல் அறிஞர்களைச் சாடும்போது அவர்கள்…