mygreatmaster.com
தாயன்பு
ஒரு தாய் தன் குழந்தையின் மீது ஒவ்வொரு மணித்துளியும் நினைவு வைத்திருப்பாள். அந்த குழந்தையின் தேவையை, அவளாகவே அறிந்து, அதனை நிறைவேற்றுகிறவள் தான் தாய். எந்த ஒரு தாயும் தன் குழந்தை வேதனைப்படுவதையோ, துன்பப்படுவதையோ விரும்பமாட்டாள். இந்த தாயன்பு தான், கடவுளின் அன்பாகச் சொல்லப்படுகிறது. இந்த தாயன்பை விட பல மடங்கு மேலானது கடவுளின் அன்பு. தாயன்பையே நாம் வியந்து பார்க்கிறோம். அப்படியென்றால், கடவுளின் அன்பு எந்த அளவிற்கு மகத்துவமானது என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.…