mygreatmaster.com
கடவுள் நம் அனைவரின் தந்தை
யூத ராபிக்களிடையே, கடவுள் எகிப்தியர்களை செங்கடலில் மூழ்கடித்த நிகழ்வுகளைப் பற்றி ஒரு கதை ஒன்று சொல்வார்கள்: எகிப்தியர்கள் இஸ்ரயேல் மக்களைத் துரத்தி வருகிறார்கள். செங்கடலை கடந்து விட்ட, இஸ்ரயேல் மக்களை அவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். கடல் நீர் பொங்கி எழுந்து அனைத்து எகிப்தியர்களும் மூழ்கி இறந்து போகிறார்கள். இதனைக்கண்ட வானதூதர்கள் மகிழ்ச்சியில் கடவுளைப் புகழ்ந்து பாடினார்கள். ஆனால், கடவுளோ மிகவும் சோகமாக, என்னுடைய படைப்புகள் அங்கே இறந்து கொண்டிருக்கிறது. நீங்களோ என்னை புகழ்ந்து கொண்டிருக்கிறீர்களே, என்று வேதனைப்பட்டாராம்.…