mygreatmaster.com
என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு
திருப்பாடல் 136: 1 – 3, 16 – 18, 21 – 22&24 நன்றி என்கிற மூன்றெழுத்து வார்த்தை, நம்முடைய மூச்சோடு கலந்துவிட்ட வார்த்தை. நமக்கு நன்மை செய்கிறவர்களை உள்ளன்போடு நினைத்துப்பார்ப்பது நம்முடைய கடமை. ஒருவர் நன்மை செய்கிறபோது அல்லது நமக்கு உதவி செய்கிறபோது, நன்றி என்ற வார்த்தையை உதிர்க்கிறோம். நன்றி என்ற வார்த்தை பொதுவாக உச்சரிக்கப்பட்டாலும், அது உதட்டளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும், உள்ளத்தளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும் உணரப்படுகிறது. நன்றி என்ற வார்த்தை எப்போது உச்சரிக்கப்பட்டாலும்…