mygreatmaster.com
இயேசு மூட்டிய தீ
இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவரது பணிவாழ்வை ஆரம்பித்தபோது, இலக்கில்லாமல் ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய பணிவாழ்வில், தனக்கென்று ஓர் இலக்கை வைத்திருந்தார். அந்த இலக்கை நிறைவேற்றுவதை, தனது வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அதைப்பற்றித்தான், இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு பேசுகிறார். மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அதுதான் தனது விருப்பம் என்று சொல்கிறார். அது என்ன தீ? நேர்மையாளர்கள் இன்னும் நேர்மையோடு வாழவும், அமைதியை ஏற்படுத்த விரும்புவோர் அவர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை உணரவும், நல்லவர்கள் இன்னும் அதிக…