mygreatmaster.com
இயேசுவைப் பின்பற்றுவோம்
நாம் அனைவருமே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய நற்செய்தி (+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 57-62 ) வாசகத்தின் சாராம்சம். இன்றைக்கு பல புனிதர்களை தாய்த்திருச்சபை நமக்குத் தந்திருக்கிறது. இந்த புனிதர்கள் அனைவருமே சிறப்பான வாழ்வை வாழ்ந்தவர்கள். இப்படியெல்லாம் கூட வாழ முடியுமா? என்று, நாமே வியந்து பார்த்தவர்கள். நாம் வாழ்ந்த இந்த சமுதாயத்தில் வாழ்ந்த, புனித அன்னை தெரசா இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இந்த நவீன காலத்திலும் ஏழை, எளிய மக்கள் மீது…