mygreatmaster.com
இயேசுவின் எல்லையில்லா அன்பு
வரிதண்டுவோரும், பாவிகளும் இயேசுவை நெருங்கிவந்தனர். ஆனால், பரிசேயரோ இயேசு சொல்வதைக் கேட்டு முணுமுணுத்தனர். இந்த முதல் இறைவார்த்தையே இருவேறான மக்களின் மனநிலையைப் படம் பிடித்துக்காட்டுகிறது. இயேசுவை நோக்கி எதற்காக பாவிகள் நெருங்கி வர வேண்டும்? பாவிகள், ஏழைகள், வரிதண்டுவோர் தங்களது வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதினர். தாங்கள் கடவுளால் ஏற்கெனவே தீர்ப்பிடப்பட்டதாகக் கருதினர். தங்களுக்கு இனிமேல் வாழ்வு இல்லை என்று நினைத்தனர். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. தங்களுக்கும் வாழ்க்கை இருக்கிறது என்ற நம்பிக்கையை அவை…