mygreatmaster.com
ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
இந்த உலகத்தில் வாழக்கூடிய மக்கள் ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு இடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒருசிலர், புகழுக்கு மயங்கி, புகழிடத்தில் அடைக்கலம் புகுகிறார்கள். ஒரு சிலர், வாழ்க்கை முழுவதும் செல்வம் சேர்க்க வேண்டும், செல்வம் தான் வாழ்க்கை என செல்வத்திடம் தங்களையே கையளிக்கிறார்கள். ஒரு சிலா் அதிகாரம் தான் எல்லாமே, என்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் தங்களது வாழ்க்கையை செலவழிக்கிறார்கள். இவர்கள் அனைவருமே எப்போதும் நிறைவைக் காணப்போவதில்லை. புகழும், பணமும், அதிகாரமும் எவருக்கும் நிறைவைத் தந்ததில்லை. நிம்மதியின்மையைத்தான் கொடுத்திருக்கின்றன. கடவுளிடம்…