lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 1
சக்தி முதற் கிளை: இன்பம் 1 சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம். சக்தி பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர். சக்தி அநந்தம், எல்லையற்றது, முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது. சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, உதறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது, ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது. சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது, குதூஹலந் தருவது, நோவு தருவது, நோவு தீர்ப்பது, இயல்பு தருவது,…