tamilchristianmessages.com
தேவனோடு இணைக்கப்பட்டிருத்தல் - Tamil Christian Messages - தமிழ் கிறிஸ்தவ செய்திகள்
மார்ச் 14 தேவனோடு இணைக்கப்பட்டிருத்தல் ரூத் 1:1-18 “அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (ரூத் 1:14). நகோமியின் இரண்டு மருமகள்களில் ஒர்பாள் ஆண்டவரைப் பின்பற்றுவதில் முழுமையான இருதயத்தோடு காணப்படவில்லை. அவளுடைய வாழ்க்கையைத் தானாகவே நடத்திக் கொள்ள விரும்பினாள். இன்றைக்கு அநேகர் அவ்விதமாகவே காணப்படுகிறார்கள். ஒர்பாள் ஒருவேளை தனக்கு ஏற்றதாக இருக்குமானால் ஆண்டவருடைய காரியங்களைப் பின்பற்றுவேன், ஒருவேளை எனக்கு அது ஏற்றதாக காணப்படவில்லை என்றால் …