kollywoodvoice.com
இந்தியில் தீர்ப்பு சொல்ல முடிகிற போது… தமிழில் தீர்ப்பு சொல்ல முடியாதா? – வைரமுத்து ஆவேசக் கேள்வி
'தமிழாற்றுப்படை' வரிசையில் 'மறைமலையடிகள்' குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர் திருவாசகம் விழாவுக்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது : ''தமிழை முன்னிறுத்துவதும் தமிழ் மொழியைப் புதுப்பிப்பதுமான தேவை இந்தத் தொழில்நுட்ப