ithutamil.com
டார்கெஸ்ட் ஹவர் விமர்சனம்
'டார்கெஸ்ட் ஹவர் (Darkest Hour)' என்பது இரண்டாம் உலகப் போர் உருவாக்கிய நெருக்கடியைக் குறித்துச் சொல்ல வின்ஸ்டன் சர்ச்சில் பயன்படுத்திய பதம். நெவில் சேம்பர்லைன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதும், எதிர்க்கட்சிகளைச் சமாளிக்க வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக அறிவிக்கப்படுகிறார். ஏன் சர்ச்சில் என்று விருப்பமின்றி அரசர் ஜார்ஜ் VI வினவ, ஹிட்லர் பற்றிய அவரது யூகம் சரியாக இருந்ததென அவருக்குச் சொல்லப்படுகிறது. டன்கிர்க்கில் சுமார் 3 லட்சம் பிரிட்டிஷ் வீரர்கள் ஜெர்மனியரால் சூழப்பட,…