indianew

eelasudar.com
சரிதா நாயரின் நிர்வாணப் படங்களை வாட்ஸ் ஆப்பில் பரப்பிய காங்கிரஸ்
என்னுடைய நிர்வாண காட்சிகளை காங்கிரஸ் கட்சியினர்தான் வாட்ஸ் ஆப்பில் பரப்பினர் என்று சரிதாநாயர் விசாரணை கமிஷனில் கூறினார்.
சோலார் பேனல் மோசடி தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி சிவராஜன் கமிஷன் முன் சரிதா நாயர் வாக்குமூலம் அளித்து வருகிறார். நேற்று முன்தினம் 8வது நாளாக வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவர் கூறியது: எனது சோலார் நிறுவனத்திற்கு கேரளாவில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் உதவி உள்ளனர். அதேபோல் எனது நிறுவனத்தின் வீழ்ச்சிக்கும் சில அரசியல் பிரமுகர்கள் காரணமாக இருந்துள்ளனர். எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வான ஹைபி ஈடனுடன், நான் எனது சோலார் தொழில் சம்பந்தமாக எதுவும் பேசியது இல்லை.
அவருடன் மற்ற விஷயங்கள் குறித்துதான் பேசியிருக்கிறேன். அது என்ன விவரம் என்று வெளிப்படையாக கூறமுடியாது. கேரளாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சோலார் பேனல் அமைக்க பொலிஸ் சங்கத்தினர் என்னிடம் ரூ.40 லட்சம் கேட்டனர். ஆனால் என்னிடம் பணம் இல்லாததால் ரூ.20 லட்சம் மட்டுமே கொடுக்க முடிந்தது. கடந்த வருடம் வாட்ஸ் ஆப்பில் என்னுடைய நிர்வாண காட்சிகள் பரவின. இந்த காட்சிகளை பரப்பியது ஆலப்புழாவில் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் தான் என எனக்கு நன்றாக தெரியும்.
வாட்ஸ் ஆப்பில் என் நிர்வாண காட்சிகளை பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நான் பொலிஸில் புகார் கொடுத்தேன். பொலிஸ் நடத்திய விசாரணையில் ஆலப்புழாவில் உள்ள சில காங்கிரஸ் பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு விசாரணையை முடக்கி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.
External image
vimeo

Kartikeya Sharma Founder and Promoter iTV Network (Information TV Pvt Ltd)

eelasudar.com
செல்போனில் கணவர் பேசாததால் மனைவி தூக்கில்
செல்போனில் கணவர் பேசாததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாகர்கோவிலில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
எலெக்ட்ரீசியன் மனைவி
நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையைச் சேர்ந்தவர் ராம்கி, எலெக்ட்ரீசியனாக வேலை பார்க்கிறார். இவருடைய மனைவி அஜிதா (வயது 24). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஸ்ரீஜெய் என்கிற மகன் இருக்கிறான்.
ராம்கி தினமும் வெளியே சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு தாமதமாக வந்ததாகவும், இது தொடர்பாக அவருக்கும், அஜிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தகராறு காரணமாக கடந்த 2 நாட்களாக இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராம்கி வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அஜிதா அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். ஆனால் ராம்கி பேச மறுத்து செல்போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் மனமுடைந்த அஜிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் தாமதமாக வந்த ராம்கி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்து அக்கம்பக்கத்தினரும் வந்தனர். உடனே கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அஜிதா தற்கொலை பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது. அஜிதாவுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார்.
External image
vimeo

Kartikeya Sharma Founder of iTV Network Talk’s about CPLT20India

Nissan ropes in John Abraham as brand ambassador - Daily News & Analysis

Daily News & Analysis
Nissan ropes in John Abraham as brand ambassador
Daily News & Analysis
Nissan India, which is aiming to corner 5 per cent of the car market here by 2020, had yesterday announced expansion of its product-line with two more models this year - an electric hybrid crossover model of its popular SUV the X-Trail and sportscar GT-R.
Nissan to have John Abraham as brand ambassadorIndia.com
John Abraham to be brand ambassador for Nissan’s leading models in IndiaNew Kerala
Auto Expo 2016: Nissan GT-R, X-Trail crossover showcased; to be launched in Q2 2016International Business Times, India Edition

all 86 news articles » http://bit.ly/1UPpsmL via http://NewsOnline.press

eelasudar.com
இறந்த மனைவியை பார்க்க முடியாமல் தவிக்கும் மதுரை முத்து
பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி; அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து
தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து, அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார்.
மதுரை முத்து, மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர். பிரபல நகைச்சுவையாளரான இவர், ‘அசத்தப்போவது யாரு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
1200க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து, வையம்மாள் (32). தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார்.
இந் நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் வியாழக்கிழமை காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, அக் காரின் இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.
இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதியும் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மனைவி இறந்த துயரத்திலுள்ள மதுரை முத்துவுக்கு மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட போது மதுரை முத்து கலை நிகழ்ச்சியொன்றுக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
மனைவி இறந்த செய்தி அறிந்ததும் தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மதுரை முத்து தீர்மானித்தார். ஆனால், அது உடனடியாக சாத்தியமாகவில்லை. அங்கு அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.
இதனால் மதுரை முத்து உடனடியாக நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளார். ஏனெனில், அமெரிக்க விதிகளின்படி அம்மை நோயுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இந் நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மதுரை முத்துவுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்மை நோய் குணமான பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து, மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றமை அவரின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
External image
Rafale jet deal on 'right track': French president Francois Hollande - Times of India

Rafale jet deal on ‘right track’: French president Francois Hollande – Times of India

Times of IndiaNEW DELHI: French president Francois Hollande has indicated that the nearly Rs 60,000-crore Rafale jets deal is unlikely to be signed during his current visit although it is on the “right track”. “The Rafale is a major project for India and France. It …‘Technicalities Take Time,’ Says French President On Rafale Deal: 10 DevelopmentsNDTVHeading to India, Hollande warns jet deal will…

View On WordPress

eelasudar.com
நண்பரின் படுக்கையறையில் பிணமாக கிடந்த மாணவி
டெல்லியில் நண்பரின் படுக்கையறையில் கல்லூரி மாணவி பிணமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் உள்ள பிரபல கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் அர்ஜூ சிங் என்ற மாணவி, இவரை திருமணம் செய்து கொள்வதாக ஆண் நணபர் ஒருவர் தெரிவித்தார். தனது குடும்பத்தினர் ஏற்றுகொள்ளமாட்டார்கள் என்று தனது ஆண் நண்பரிடம் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2-தேதி அர்ஜூ சிங் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதனை தொடர்ந்து மாணவி மாயமாகி விட்டதாக அர்ஜூ சிங் பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் ஆண் நண்பரின் படுக்கையறையில் அர்ஜூ சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
External image
eelasudar.com
இலவச திருமணம்: 68 சீர்வரிசை பொருட்கள்… கூடவே மணமக்கள் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர்
உடுமலைப்பேட்டை: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 68 ஜோடிகளுக்கு நடத்திவைக்கப்பட்ட இலவச திருமணத்தில் மணமக்களின் நெற்றியில் இலவச ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர் அதிமுகவினர்.வெள்ள நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி எதிர்ப்பு ஆளான அதிமுகவினர் இப்போது எங்கும் எதிலும் ஸ்டிக்கர் மயம் என்றாக்கிவிட்டனர்.வெள்ளிக்கிழமையன்றி உடுமலைப் பேட்டையில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ஒரேமேடையில் 68 திருமணங்கள் நடைபெற்றன. இந்த 68 ஜோடிகளின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் படம் பொருத்தப்பட்ட பட்டை கட்டப்பட்டிருந்ததுதான் வேடிக்கை. அதை கட்டிக்கொண்டு மணமக்கள் அப்பாவியாய் அமர்ந்திருந்ததுதான் வேடிக்கை.
External image

இலவச திருமணம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாள் விழாவையொட்டி உடுமலை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் ஏழை-எளிய குடும்பங்களை சேர்ந்த 68 ஜோடிகளுக்கு நேற்று உடுமலை குட்டை திடலில் இலவச திருமணம் நடைபெறுகிறது. 68 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்து தாய் வீட்டு சீதனமாக 68 வகையான சீர்வரிசை பொருட்களை தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஏற்பாடு செய்திருந்தார்
External image

களை கட்டிய திருமணம் திருமணங்களை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி நடத்திவைத்தார் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. வாரியத்தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், சி.மகேந்திரன் எம்.பி., சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., மற்றும் சட்டசபை, நாடளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
External image

68 சீர்வரிசை பொருட்கள் இந்த திருமண விழாவில் மணமக்களுக்கு வழங்குவதற்காக கட்டில், பீரோ, மெத்தை, பாத்திரங்கள் உள்பட 68 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. கூடவே அம்மா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட நெற்றிப்பட்டையும் மணமக்களுக்கு கட்டப்பட்டது.
oneindia.com
eelasudar.com
வேலூரில் பரபரப்பு வானில் இருந்து விழுந்து வெடித்தது வெடிகுண்டா? ஒருவர் பலியால் பீதி!
கல்லூரி வளாகத்தில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள் ஒன்று வெடித்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் டிரவைர் ஒருவர் பலியாகியுள்ளதால் அந்தப் பகுதியில் பீதி நிலவுகிறது.
வேலூர் மாவட்டம் நாட்ராம்பள்ளியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில் அதிக சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வெடித்துள்ளது. இதனால் கல்லூரியில் இருந்த மாணவர்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது கல்லூரி பேருந்து கண்ணாடிகள் நொறுங்கிக் கிடந்துள்ளன. மேலும் பேருந்து ஓட்டுநர் காமராஜ் என்பவர், பலத்த காயத்துடன் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தற்போது காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வெடித்தது ஏதேனும் வெடிகுண்டா அல்லது விண்கற்களா என விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில்,” காது செவிடாகுற அளவு பயங்கர சத்தத்தோட ஒரு பொருள் வானத்திலிருந்து விழுந்துச்சு. அதனால 3 அடிக்கு பள்ளம் ஏற்பட்டிருக்கு. இந்த சம்பவத்தின் போது பக்கத்தில இருந்த பஸ் டிரைவர் காயம்பட்டு இறந்துட்டார். மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
இந்தத் திடீர் வெடிப்புக்கு தீவிரவாதிகள் சதிச் செயல் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என்றும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த டிரைவரின் பின்னணி குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது.
External image
External image
eelasudar.com
ரூ.1 கோடி சம்பளத்துடன் வேலை பெற்ற வெல்டரின் மகன்
இன்னும் சில மாதங்களில் ஐ.ஐ.டி காரக்பூரில் பட்டப்படிப்பை நிறைவு செய்ய உள்ள வத்சல்யா சிங்(வயது 21) என்ற மாணவருக்கு அமெரிக்காவின் சிலிக்கான் வாலியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ. 1.02 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
இதில், சிறப்பம்சம் என்னவெனில் வத்சல்யாவின் தந்தை ஒரு வெல்டர் ஆகும். எளிய குடும்பத்தில் இருந்து வந்த வத்சல்யா, 2009 ஆம் ஆண்டு ஐஐடி நுழைவுத்தேர்வில் 382-வது இடத்தை பிடித்தார்.
வங்கியில் லோன் பெற்றே படித்தாக வத்யல்சா சிங் தெரிவிக்கிறார். நடப்பு ஆண்டு அக்டோபரில் மைக்ரோசாப்ட் பணியில் இணைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
External image
eelasudar.com
மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி?
மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி? அதிர்ச்சியில் சின்னத்திரையினர் பல மேடைகளில் தன் நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைத்தவர் மதுரை முத்து.
இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கூட தலையை காட்டினார்.இந்நிலையில் இன்று சிவகங்கை பிள்ளையார்பட்டி கோவிலுக்கு இவருடைய மனைவி வையம்மாள் சென்றுள்ளார். அப்போது திருப்பத்தூர் கோட்டையிருள் பகுதியில் கார், ட்ரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தில் மோதியுள்ளது.
இதில் சம்பவ இடத்திலேயே முத்துவின் மனைவி வையம்மாள் இறந்துள்ளார். இச்சம்பவம் சின்னத்திரை கலைஞர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த முத்துவின் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரம் தாங்க முடியாதவை தான்.
சினி உலகம் முத்துவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது…
External image
External image
External image
eelasudar.com
இந்திய நடிகர்களுடன் தொண்டமான்?
தென்னிந்திய நடிகர்களை அழைத்துவந்து பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளச் செய்யும் உத்தியை மேற்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெண்கள் மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் ஹட்டன் – தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிஸின் மலையகத்தில் காணப்படும் 48 கட்சிக் காரியாலயங்களைச் சேர்ந்த வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவிலிருந்து நடிகர்கள், பேச்சாளர்கள் மற்றும் கலைஞர்களை அழைத்துவந்து தலவாக்கலையில் நடைபெறும் பெண்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்வதற்கு கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
External image
eelasudar.com
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவு
ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து 10 நாட்களுக்குள் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவித்து வருகிறார். அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், வாக்குமூலம் பெற்றவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என்று கூறினார்கள்.
ஆனால் விடுதலை என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ராஜிவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். ஆனால் அப்போதைய மத்திய அரசாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சி 7 பேரின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றம் போனது.
7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகிறார்கள். மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தாலும் அவர்கள் விடுதலை செய்யப்படாதது வேதனை அளிக்கிறது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்னை நேரில் அழைத்து ஒரு சகோதரிபோல் ஆறுதல் கூறினார். அப்போது பேரறிவாளன் விடுதலையாகுவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியாக கூறினார்.
எனது மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. 7 பேரின் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்த பிறகுதான் அவர் தேர்தலை சந்திப்பார் என்று கருதுகிறேன். இவ்வாறு அற்புதம்மாள் தெரிவித்தார்.
External image
eelasudar.com
“நீயா நானா” நமீதா….! பொண்ணுங்களே இப்படித்தான்…
”சொல்லுங்க நீங்க யாரு… இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று கேட்டதும்…. கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்…’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார விவாதத்தில் உருவான ஸ்டார்..!
’’அச்சச்சோ பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர்ச்சியா இருந்துருக்கு. ஆனா, இனிமே எல்லாம் இப்படித்தான்!’’
அந்த ஷோவில் என்ன நடந்துச்சு… முழுசா சொல்லுங்க?
’’என் ப்ரோ மாலினி ஜீவரத்தினம், ஷோவுக்கு முதல் நாள்தான் ’நீயா நானா’வில் கலந்துக்கணும்னு வரச் சொன்னாங்க. அதனால அவசரமா கிளம்பிப் போனேன். அங்கு போனதுல இருந்தே என்னை எல்லாரும் ஒரு மாதிரிதான் பார்த்துட்டு இருந்தாங்க. என் ஹேர் ஸ்டைல், டிரெஸ்லாம் சிலருக்கு உறுத்திருக்கலாம் போல. நான் நடுவுல உட்கார்ந்திருந்தேன். அதனால எதிர்ல யார் பேசினாலும் கவனிக்க வேண்டியிருந்தது.
நிகழ்ச்சி ஆரம்பிச்சதுல இருந்தே கடுப்பாக இருந்துச்சு. பாய்ஸுக்கு என்ன பாட்டு வேணும்னு கேட்டதுக்கு ’இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சி போச்சுடா’னு சொல்றதுல இருந்து, பெண்கள் மீது வார்த்தை தாக்குதல் மேற்கொள்ளும் பாடல்களையே சொல்லிட்டு இருந்தாங்க. ’கிளப்புள மப்புல…’ பாட்டை யார் பாடினாலும் எனக்குப் பிடிக்காது.
ஒருவர் அந்தப் பாட்டை ஃபீல் பண்ணி பாடினார். அதுதான் கோபத்தை தூண்டி விட்ருச்சு. அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும். ’பெண்கள் ஏன் காஞ்சிப்பட்டை கட்டாமல் கர்ச்சீப் கட்டுகிறார்கள்’னு ஒரு வரி.
நான் கேக்குறேன்… அந்தப் பாட்டை பாடி ஆடுன ஹிப்ஹாப் ஆதி என்ன வேட்டி கட்டிட்டா ஆடுனார்? தமிழ்நாட்டுல கிட்டதட்ட 90 சதவிகித யங்ஸ்டர்ஸ் எங்கே வேட்டி கட்டுறாங்க? ஷார்ட்ஸ் போட்டுட்டுதான் சுத்துறாங்க. அதைப் பத்திலாம் ஏன் யாரும் சமூக அக்கறையோட கேள்வி கேட்கலை. இந்தக் கோபத்தைதான் அன்னைக்கு ஷோவில் காமிச்சேன்!”
வேட்டி, சேலை விஷயத்தில் நீங்க சொல்றது சரி. ஆனா, ஆண்கள் மது அருந்தினால் பெண்களும் அருந்தணுங்றது கட்டாயமா?
’’ஆண்கள் குடிக்கிறதால நானும் குடிப்பேன்னு சொல்லலை. ஆண்கள் சோறு சாப்பிடுறாங்க… அதனாலதான் பெண்களும் சோறு சாப்பிடுறாங்கனு சொல்ற மாதிரி எதையும் பொதுப்படையா பார்க்க முடியாதுதான்.
ஆனா, பெண்களுக்கும் ஆண்களுக்கு இருக்கும் அதே வலி, வேதனை உணர்வுகளுடன் இருக்கும் உடல் அமைப்புதான். அவங்களும் மனுஷிதான். ஒரு பெண்ணுக்குத் தோணும்போது குடிக்கலாம்ங்றதுல எந்தத் தப்பும் இல்லைங்றதுதான் என் பார்வை. அதே சமயம் அது ஒவ்வொருவர் தனிநபர் விருப்பு, வெறுப்பு சார்ந்தது. ஒரு பெண்ணை மது குடிக்க கட்டாயப்படுத்துறது எவ்வளவு தப்போ, அதே அளவு தப்புதான் மது அருந்தும் ஒரு பெண்ணை விமர்சிப்பதும்.
மது குடிப்பதும், புகை பிடிப்பதும் உடல் நிலைக்குக் கேடுனு எனக்குத் தெரியும். நான் அதைச் செய்ய மாட்டேன். ஆனா, அதே சமயம் ஆண்கள் மது அருந்தினால் அது சமூக வெளியில் ஏற்றுக் கொள்ளப்படுவதும் பெண்கள் குடிப்பதைப் பற்றி பேசினாலே ’குய்யோ முய்யோ’னு கத்துறதும் சமூகத்தின் இறுகிய ஆணாதிக்கச் சிந்தனையைதான் வெளிப்படுத்துது.
அது மட்டுமில்லாமல், இங்கே ஒரு ஆணும் பெண்ணும் காதலித்தால் பெண்களுக்கு கல்வி நிலையங்களின் ஆதரவு இருக்குனு அபத்தமா பேசினாங்க. அதுதான் எனக்கும் புரியலை. இது எவ்வளவு பெரிய பொய்? பெண்களுக்கு எப்போ எந்த கல்வி நிலையத்தின் ஆதரவு கிடைச்சிருக்கு. கல்வி நிலையங்களில் பெண்கள் எதிர்கொள்கிற அடக்குமுறை அவளோட தோழிக்கே தெரியாது. பொதுவெளியில் பெண்களுக்கு எல்லாரும் ஆதரவாக இருப்பாங்கனு நம்புறது மூடநம்பிக்கை. என் விஷயத்துலயே என்னலாம் நடந்துச்சுனு பார்த்தீங்கள்ல!’’
ஆமா… மீம்ஸ், கமெண்ட்னு வரம்பு மீறி விமர்சிச்சாங்களே… அதையெல்லாம் எப்படி எடுத்துக்கிட்டீங்க?
’’அதெல்லாம் எதிர்பார்க்கலை. ஆனா, கண்டுக்கலை. பல மீம்கள் மிக மோசமா இருந்துச்சு. சில ஃபேஸ்புக் பேஜ், வீடியோக்களை என் அக்கா புகார் கொடுத்து எடுக்க வைச்சாங்க. பல பின்னூட்டங்களில் என்னை நான்கு பேர் சேர்ந்து வலுக்கட்டாய உடலுறவு கொள்ளணும்னுலாம் எழுதியிருந்தாங்க. அவங்களை நினைச்சு பரிதாபமாத்தான் இருந்துச்சு.
ஒரு பொண்ணை பழி வாங்க பாலியல் வன்புணர்வு பண்ணணும்னு நினைக்கிற உளவியலில் இருந்து பெண்கள் உடல் மீதான அடக்குமுறை தொடங்குது. உடலுறவைப் பற்றிய சரியான புரிதல் இல்லாதவங்ககிட்ட என்ன பேசி என்ன ஆகப் போகுதுனுதான் தோணுது. ஒரு நடிகைக்கு விருது தரப்படும்போது, அவரது நடிப்பைப் பற்றி விமர்சிக்காமல், அவரது அழகை விமர்சிப்பவர்கள் பலர்.
அதன் மூலம் அவர்களின் மன வக்கிரத்தையே நாம் புரிந்து கொள்ள முடியும். என்னைப் பத்தின பின்னூட்டங்களும் மீம்ஸ்களும் அவங்களைப் பத்தி நிறைய உணர்த்தியிருக்கு. நேர்ல பேசுறப்போ கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாம, ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு வக்கிரமா பேசுறவங்ககிட்ட நான் ஏன் மல்லுக்கட்டணும். இவங்களுக்கு நடுவுல சில நல்ல மீம்ஸ்களும் பாராட்டுகளும் எனக்குக் கிடைச்சது. அதுதான் பெரிய சந்தோஷம்!’’
அம்மா, அப்பா, உறவினர்கள், நண்பர்களின் ரியாக்ஷன் என்ன?
’’அம்மா, அப்பா, இருவரின் நண்பர்களும் ‘நல்லா நறுக்குனு கேட்டம்மா’னு பாராட்டினாங்க. ‘ஒரு பையன் மாதிரி வளர்த்துட்டோம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, உன்னை ஒடுக்கும் சமூகத்துக்கு எதிரா நீ கேள்வி கேட்டப்ப, உன்னை சரியாதான் வளர்த்திருக்கேன் தோணுது’னு பூரிப்பா சொன்னார். மத்தபடி ஃப்ரெண்ட்ஸ்லாம் வாழ்த்தினாங்க. அவங்களுக்கு நான் இப்படி பேசுறதுலாம் புதுசு இல்லை.
நான் எப்பவும் அவங்ககிட்ட பேசுறதை டி.வில பேசியிருக்கேன்… அவ்வளவுதான். ஆனா, நிகழ்ச்சி ஒளிபரப்பானதுல இருந்து குவியும் வாழ்த்துக்கள், திட்டுக்களால் ஓவர்நைட்டில் எனக்கு ஸ்டார் அந்தஸ்து கொடுத்துட்டாங்க. எங்கெல்லாமோ இருந்து வேலைக்கான அழைப்பு வருது. தேங்க்ஸ் ஃப்ரெண்ட்ஸ்!”’
External image
eelasudar.com
கள்ளக்காதலியை துப்பாக்கி முனையால் அடித்து கொல்லும் காதலர்
உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரை சேர்ந்தவர் பூஜா இவர் கடந்த 2008 ஆம் அண்டு அபிஷேக் என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கடந்த 2011 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகாரத்து ஆனது. இதை தொடர்ந்து பூஜா தனது பெற்றோர்கள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அனுபம் என்பவருடன் பூஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அனுபம் பல்பொருள் அங்காடி வைத்து உள்ளார்.
புஜா அனுபமிடமிருந்து அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து உள்ளார். அவரும் தனது கடையில் இருந்து ரூ. 2 லட்சம் வரை எடுத்து கொடுத்து உள்ளார். இருந்தாலும் பூஜா தங்களுக்கு இடையே இருக்கும் காதலை வெளிப்படுத்தி விடுவதாக மிரட்டி மீண்டும் மீண்டும் பணம் கேட்டு உள்ளார்.
இதனால் அனுபம் ஒரு ஓட்டலுக்கு பூஜாவை அழைத்து உள்ளார். அங்கு வந்த பூஜாவுடன் அனுபம் சண்டை போட்டு உள்ளார். பின்னர் பூஜாவை தாக்கி தான் கொண்டு வந்து இருந்த துப்பாக்கியால் சுட முயற்சிச் செய்தார் ஆனால் துப்பாக்கி சரியாக வேலை செய்ய வில்லை இதனால் அனுபம் பூஜாவின் தலையில் துப்பாக்கி முனையால் தாக்கினார் பின்னர் துப்பாக்கியால் சுட்டு உள்ளார். உடனடியாக பூஜா அங்கிருந்தவர்களால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டார் ஆனால் பூஜா மருத்துவமனையில் மரணமடைந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுபமை கைது செய்து உள்ளனர்.
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொலை செய்யும் வீடியோ காட்சி தற்போது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
External image
eelasudar.com
நாளை திருமணம்…. விபத்தில் பலியான புதுப்பெண்…
அரியலூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில்,  நாளை திருமணம் நடைபெற இருந்த புதுப்பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து- சாவித்திரி தம்பதியின் மகளான சுகந்தி (26) என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு நிச்சயத்தார்த்தம் செய்து இருந்தனர். சுகந்தியின் திருமணம் 31ம் தேதி (நாளை) நடைபெறுவதாக இருந்தது. இதைத்தொடர்ந்து சாவித்திரியின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் திருமண பத்திரிகை கொடுத்த வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில், ஏழை பெண்களின் திருமணத்துக்காக அரசு வழங்கும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் தங்கம் மற்றும் உதவி தொகை பெற விண்ணப்பிப்பதற்காக,  பொன்பரப்பியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும்பொருட்டு,  சாவித்திரி தனது மருமகன் ஸ்டாலின்(35) என்பவரின் இருசக்கர வாகனத்தில் தனது மகள் சுகந்தியுடன் அரியலூர் நோக்கி நேற்று மதியம் சென்றனர். இருசக்கர வாகனத்தை ஸ்டாலின் ஓட்டிச்சென்றார். அரியலூரை அடுத்த தாமரைக்குளம் அண்ணா சிலை அருகே ஸ்டாலினின் இருசக்கர வாகனம் வந்தபோது,  எதிர்புறத்தில் அரியலூரில் இருந்து ஒட்டக்கோயிலிலுள்ள தனியார் சிமெண்ட் ஆலைக்கு சிமெண்ட் ஏற்றுவதற்காக லாரி ஒன்று வேகமாக வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்த அந்த லாரி,  இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியது. இதில், இருசக்கர வாகனத்தோடு 10 மீட்டர் தூரத்திற்கு அந்த லாரி மூன்று பேரையும் இழுத்து தூக்கி வீசிவிட்டு,  அருகிலுள்ள மின்சார கம்பத்தில் மீது  மோதி நின்றது. இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்டாலின்,  அருகிலுள்ள கழிவுநீர் வடிகாலில் படுகாயங்களோடு ரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தார். இந்த விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாளை திருமணம் நடைபெற உள்ள நிலையில்,  புதுப்பெண் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க செய்தது. மேலும் அரியலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விபத்திற்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
அரியலூர் பகுதியில் அதிகளவில் சிமெண்ட் ஆலைகள் இருப்பதால் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து எண்ணிக்கையும் அதிகரித்து உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் அரசு பேருந்து மீது சிமெண்ட் லாரி மோதி 14 பேர் பலியாகினர். மேலும் பள்ளி வேன் மீது சிமெண்ட் லாரி மோதி,  பள்ளி மாணவர்கள் உட்பட 4 பேர் பலியாகினர். இப்படி தொடர்ச்சியாக சிமெண்ட் லாரிகளால் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது என அந்த பகுதி மக்கள் அரியலூர்-செந்துறை சாலையில் 100க்கும் மேலானோர் போராட்டம் நடத்தினர். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் காவல்துறையினர்,  சம்பவ இடத்திற்கு வந்து,  விபத்து குறித்து ஆய்வு செய்தனர்.
பின்னர் விபத்தில் இறந்தவர்களின் சடலங்களை பிரதே பரிசோதனைக்காக காவல்துறையினர் ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு முயன்றனர். அப்போது அதனை ஏற்க மறுத்து,  சிமெண்ட் ஆலை லாரிகளால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும், இதற்கு சிமெண்ட் ஆலைகள், விபத்தில் இறந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறி காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிட்டத்திட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, போலீசார் இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த போராட்டத்தால் அரியலூர்- செந்துறை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-எம்.திலீபன் vikatan
External image